09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

மின்னஞ்சல் திட்டம் மூலம் 8 மில்லியன் டொலர் மோசடி

பல மில்லியன் டொலர் பெறுமதியான மின்னஞ்சல் திட்ட மோசடி குற்றச்சாட்டில் இலங்கையில் பிறந்த பிரித்தானிய பிரஜை ஒருவருக்கு பிரித்தானியாவில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் வேல்ஸ் காவல்துறையின் இணையதளத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கெனாபோன் க்ரௌன் நீதிமன்றம் நீதிமன்றம் இந்த தண்டனையை விதித்துள்ளது.

இதற்கமைய, கைகல் கினேன் என்ற 41 வயதுடைய இலங்கையில் பிறந்த பிரித்தானிய பிரஜைக்கு, 7 ஆண்டுகளும் 8 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு நிறுவனம் ஒன்றின் மின்னஞ்சல் திட்டம் மூலம் 8 மில்லியன் டொலர் மோசடியில் அவர் ஈடுபட்டுள்ளமை விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கமைய, அவர் மீது, பணச்சலவை உள்ளிட்ட மேலும் சில குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.




மின்னஞ்சல் திட்டம் மூலம் 8 மில்லியன் டொலர் மோசடி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு