07,Apr 2025 (Mon)
  
CH
SRILANKANEWS

அரசாங்கம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது. பண்டிகைக் காலங்களில் ஏற்படும் விபத்துகளில் பட்டாசு வெடிப்பதால் 36% விபத்துக்கள் ஏற்படுவதாகவும், பட்டாசுகள் மற்றும் பட்டாசுகளை கவனக்குறைவாக பயன்படுத்துவதால் 17% கண் பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக ஆய்வு அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விசேட சத்திர சிகிச்சை நிபுணர் டொக்டர் சஜித் ரணதுங்க, முச்சக்கர வண்டி விபத்துக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் படுகாயமடைந்தவர்களில் 100% பேர் இன்னும் குணமடையவில்லை என தெரிவித்தார். மேலும் இலங்கையில் அதிகளவு உயிரிழப்புகள் நெடுஞ்சாலைகளில் இடம்பெறுவதாகவும் விசேட சத்திர சிகிச்சை நிபுணரான டொக்டர் சஜித் ரணதுங்க தெரிவித்துள்ளார்.





அரசாங்கம் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு