08,Apr 2025 (Tue)
  
CH
WORLDNEWS

சிட்னியில் கத்திக்குத்து - இதுவரை 4 பேர் பலி!

அவுஸ்திரேலியாவின் சிட்னியில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.  இந்த கத்திக் குத்து சம்பவத்தில் 9 மாத குழந்தை உட்பட மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. இதனையடுத்து, கத்திக் குத்து தாக்குதலை மேற்கொண்ட நபர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

 சிட்னியில் உள்ள வெஸ்ட்ஃபீல்ட் பல்பொருள் அங்காடியில் இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சம்பவத்தை அடுத்து குறித்த கட்டிடத்தில் இருந்து நூற்றுக்கணக்கான மக்கள் வௌியேற்றப்பட்டு, கட்டிடம் முழுவதுமாக பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தாக்குதல்தாரி தொடர்பில் பொலிஸார் எவ்வித தகவல்களையும் பொலிஸார் வௌியிடவில்லை.





சிட்னியில் கத்திக்குத்து - இதுவரை 4 பேர் பலி!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு