30,Apr 2024 (Tue)
  
CH
SRILANKANEWS

O/L பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகளுக்கான அனுமதி அட்டைகள் அடுது்த வாரம் முதல் விநியோகிக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளன.

இதன்படி, பாடசாலை விண்ணப்பதாரிகள் அதிபர்களினூடாக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக்கொள்ள முடியும். தனிப்பட்ட விண்ணப்பதாரிகள் தபாலினூாடக பரீட்சை அனுமதி அட்டைகளை பெற்றுக் கொள்ள முடியும். எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை, எதிர்வரும் 15 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இம்முறை பரீட்சைக்கு 452,979 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.




O/L பரீட்சை மாணவர்களுக்கான அறிவிப்பு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு