01,May 2024 (Wed)
  
CH
WORLDNEWS

UK அறிமுகம் செய்துள்ள புதிய விசா திட்டம்!

பிரித்தானியாவில் குடியேற்ற நடைமுறையை நவீனமயமாக்கும் மற்றும் டிஜிட்டல் மயப்படுத்தும் நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. ஈ-விசா அறிமுகமானது மோசடி, இழப்பு மற்றும் ஆவணங்களை துஷ்பிரயோகம் செய்யும் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் எல்லைப் பாதுகாப்பை பலப்படுத்தும் என்று அரசாங்கம் நம்புகிறது.

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஈ-விசா குறித்து மேலும் தெரியவருகையில், குடியேற்ற ஆவணங்களை கைவசம் கொண்டுள்ள தரப்பினருக்கு அவற்றை ஈ-விசாவுக்கு மாற்றும் நடவடிக்கை தொடர்பான செயல்முறையை உள்ளடக்கிய ஈ-மெயில் நேற்று (17) முதல் அனுப்பப்பட்டு வருகிறது.

இதன்படி, எதிர்வரும் 2025 ஆம் ஆண்டளவில் பிரித்தானியாவில் உள்ள அனைவருக்கும் ஈ-விசா வழங்கப்படுமென என்று உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஈ-மெயிலில் அனுப்பப்பட்டுள்ள பயோமெட்ரிக் குடியிருப்பு அனுமதி (Biometric Residence Permits – BRPs) எனும் இணையத்தளத்தில் கணக்கொன்றை உருவாக்குவதன் மூலம், பிரித்தானியாவில் உள்ளவர்களுக்கு ஈ-விசாவை பெற்றுக் கொள்ள முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை, பிரித்தானியாவி்ல் உள்ளவர்கள், தங்கள் குடியேற்றத்துக்கான சான்றாக பயன்படுத்த முடியுமென கூறப்பட்டுள்ளது. மோசடி, இழப்பு மற்றும் ஆவணங்களை துஷ்பிரயோகம் செய்தல் ஆகிய சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதையும் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துவதையும் முதன்மையாக கொண்டு இந்த ஈ-விசா திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் ஈ-விசா மூலம், தற்போது பிரித்தானியாவில் உள்ளவர்களின் குடியேற்ற நிலைக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாதென தெரிவிக்கப்பட்டுள்ளது.




UK அறிமுகம் செய்துள்ள புதிய விசா திட்டம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு