25,Aug 2025 (Mon)
  
CH
WORLDNEWS

எரிமலையால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!

இந்தோனேசியாவில் உள்ள ருவாங் எரிமலை வெடித்துள்ளதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. வெடித்துள்ள எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

1871 ஆம் ஆண்டு இவ்வாறு வெடித்த எரிமலையின் சில பகுதிகள் கடலில் விழுந்து சுனாமியை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக, எரிமலையைச் சுற்றி வசித்த சுமார் 11,000 மக்களை அதிகாரிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்ப வேண்டியிருந்தது.

எந்நேரத்திலும் வெடிக்கும் நிலையில் உள்ள ருவுங் எரிமலை இந்தோனேசியாவின் வடக்கு சுலவேசி பகுதியில் உள்ள ஒரு தீவில் உள்ளது.

இந்நிலையில் தற்போது எரிமலை வெடித்து எரிமலைக்குழம்பு மற்றும் சாம்பல் வெளியேறி வருவதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.




எரிமலையால் இந்தோனேசியாவில் சுனாமி எச்சரிக்கை!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு