01,May 2024 (Wed)
  
CH
SRILANKANEWS

இலங்கையில் தனிநபர் செலவில் பாரிய மாற்றம்!

இலங்கையில் ஒருவரின் மாதாந்த வருமானம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் பெப்ரவரி மாதத்தில் குறைந்துள்ளதாகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பெப்ரவரி மாதத்திற்கான அதிகாரபூர்வ வறுமைக் கோடு அட்டவணையை அந்த திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் உள்ள ஒருவருக்கு அவர்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாதாந்தம் குறைந்தபட்சம் 16,975 ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கொழும்பு மாவட்டத்தில் வசிக்கும் ஒருவருக்கு அடிப்படை தேவைகளுக்கான குறைந்தபட்ச தொகை 18,308 ரூபா என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதத்துடன் ஒப்பிடுகையில் நாட்டில் பணவீக்கம் குறைந்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




இலங்கையில் தனிநபர் செலவில் பாரிய மாற்றம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு