இந்த ஆண்டு ஹஜ் யாத்திரையின் போது 1,301 பேர் உயிரிழந்துள்ளதாக சவுதி அரேபியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இறந்தவர்களில் பெரும்பாலானவர்கள் சட்டவிரோத யாத்ரீகர்கள் என்றும் அவர்கள் அதிக தூரம் வெப்பத்தில் நடந்து செல்ல வேண்டியிருந்ததாகவும் கூறப்படுகிறது.
பல நேரங்களில் வெப்பநிலை 50 டிகிரி செல்சியஸைத் தாண்டியது.
இறந்தவர்களில் சுமார் 75% பேர் ஹஜ் பயணத்திற்கான உத்தியோகபூர்வ அனுமதிகளை கொண்டிருக்கவில்லை என்றும் அவர்களில் பெரும்பாலானவர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வெப்பம் காரணமாக நோய்வாய்ப்பட்ட சுமார் 500,000 பேருக்கு சுகாதாரத் துறையினர் சிகிச்சை அளித்துள்ளதுடன், அவர்களில் சுமார் 140,000 பேர் சட்டவிரோத யாத்ரீகர்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..