2024 T20 உலகக்கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் தற்போது இடம்பெற்று வரும் போட்டியில் அவுஸ்திரேலியா அணிக்கு 206 என்ற வெற்றி இலக்கை இந்தியா அணி நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற அவுஸ்திரேலியா அணி முதலில் துடுப்பெடுத்தாட இந்திய அணிக்கு அழைப்பு விடுத்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய அணித்தலைவர் ரோஹித் சர்மா 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
8 ஆறு ஓட்டங்கள் மற்றும் 7 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர ்இந்த ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். சூர்யகுமார் யாதவ் 31 ஓட்டங்களையும், சிவம் துபே 28 ஓட்டங்களையும் மற்றும் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ஹர்திக் பாண்டியா 27 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் மிச்சல் ஸ்டார்க் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் தலா இவ்விரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
0 Comments
No Comments Here ..