மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில், கடந்த ஜனவரி 24ஆம் திகதி தொடக்கம் 2020 ஜனவரி 31ஆம் திகதி வரையும் 193 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மட்டக்களப்பு மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவில் இந்த வாரம் இதுவரை 29 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்தமாக கடந்த வாரம் 193 பேர் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், வீடுகளில் நீர் தங்கியுள்ள இடங்களை அகற்றி சுத்தமாக வைத்து கொள்ளுமாறும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவிற்கு பொறுப்பான வைத்திய கலாநிதி வே.குணராஜசேகரம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
0 Comments
No Comments Here ..