09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

முதன் முதலாக கொரோனா வைரஸ் குறித்து தெரியப்படுத்திய மருத்துவர் உயிரிழப்பு

முதன் முதலாக கொரோனா வைரஸ் குறித்து தெரியப்படுத்திய மருத்துவர் உயிரிழப்பு.

முதல்முதலில் சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக எச்சரிக்கை விடுத்த மருத்துவர் 

லீ வென்லியாங் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து உகான் நகரின் சீன மருத்துவரான லீ வெண்லியாங் கடந்த டிசம்பர் மாதமே எச்சரித்து உள்ளார். அதிகமானோர் காய்ச்சல் பாதிப்பால் தன்னை அணுகியதால், இது வழக்கத்திற்கு மாறாக உள்ளது சார்ஸ் போன்ற வைரஸ் தாக்கியிருக்கலாம் என எச்சரிக்கையை விடுத்தார். இதுதொடர்பான தகவலை தன்னுடைய நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார். தொற்றுநோய் போல் பரவும் என்பதால், சக மருத்துவ நண்பர்களை எச்சரிக்கும் விதமாக கருத்துக்களை ‘வி சாட்டில்’ தெரிவித்தார் மற்றும் மாஸ்க் அணிந்து பணியாறும் மாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

ஆனால் சீனாவை சேர்ந்த பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் அவரை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனையடுத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த போதும் மருத்துவர் லீ வெண்லியாங் பாதிப்புக்குள் சிக்கினார். அவருக்கும் வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

ஜனவரி 20-ம் தேதிதான் சீன அரசாங்கம் கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து அதிகாரப்பூர்வமாக தெரிவித்தது. அதன்பின்னர், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவர் லீயை தொடர்புகொண்டு மன்னிப்பு கோரினர். தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மருத்துவர் பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விவகாரத்தில் சீன அரசுதான் குற்றவாளி என பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதேவேளை கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 636 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சீனாவின் கொரோனா வைரஸ் காரணமாக மாபெரும் அச்சம் நிலவி வருகிறது. நாளுக்கு நாள் இதனால மக்கள் சீனாவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். பிரிட்டன், பிரான்ஸ், அமெரிக்கா ஆகிய நாடுகளிலும் இந்த வைரஸ் பரவி உள்ளது.

மொத்தமாக 22 நாடுகளில் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. வுஹான் நகரில் இருக்கும் மீன் மார்க்கெட்டில் இது தோன்றி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.

இந்த கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது மிகவும் கடினம் என்று சீன ஜனாதிபதி ஜி ஜிங்பிங் தெரிவித்துவிட்டார். இந்த வைரஸ் வேகமாக பரவுகிறது. இதற்கு மருந்து கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கிறது. இதன் வேகம் நாங்கள் நினைத்தை விட அதிகமாக இருக்கிறது. நாளுக்கு நாள் வைரஸ் பரவும் வேகம் அதிகரித்து வருகிறது. இதுவரை நோய் தாக்கப்பட்டவர்களை கண்காணித்து வருகிறோம். அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம், என்று குறிப்பிட்டுள்ளார்.

இப்போது எங்களால் உறுதியாக கூற கூடிய ஒரே விஷயம், இந்த வைரஸ் பரவுவதை எங்களால் தடுக்க முடியவில்லை, என்றுள்ளார். இதனால் தற்போது ஜி ஜிங்பிங் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஹாங்காங் போராட்டம் காரணமாக சீன அரசு நிறைய பிரச்சனைகளை சந்தித்தது. அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவின் வர்த்தக போரும் அந்த நாட்டை பாதித்தது தற்போது மிகப்பெரிய வைரஸ் அந்த நாட்டை கலங்க வைத்துள்ளது.

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதலில் 73 பேர் ஒரே நாளில் பலியான சம்பவம் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸால் பலி எண்ணிக்கை 636 ஆகி உயர்ந்துள்ளது. இந்த பெப்ரவரி மாத இறுதியில் பலி எண்ணிக்கை 2500 ஐ தாண்டும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

அந்நாட்டு மக்களை இது அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மொத்தம் 31,161 பேர் சீனாவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்துள்ளனர்




முதன் முதலாக கொரோனா வைரஸ் குறித்து தெரியப்படுத்திய மருத்துவர் உயிரிழப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு