09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

மலாலா மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சிறையிலிருந்து தப்பியோட்டம்

பாகிஸ்தானை சேர்ந்த மலாலா யுசுப்சாய், பயங்கரவாதிகளின் மனித உரிமை மீறலுக்கு எதிராகவும், பெண் கல்விக்கு ஆதரவாகவும் போராடி வந்தார்.


கடந்த 2012-ம் ஆண்டு மலாலா மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினார்கள். இதில் படுகாயம் அடைந்த அவரை லண்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.


மலாலா மீது துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்திய தலீபான் பயங்கரவாதி இஷானுல்லா இஷானை கைது செய்து பாகிஸ்தான் சிறையில் அடைத்தனர். பெண் கல்விக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்த மலாலாவுக்கு 2014-ம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இதற்கிடையே ஜெயிலில் இருந்து பயங்கரவாதி இஷானுல்லா இஷான் தப்பியுள்ளான். அவன் ஜெயிலில் இருந்து தப்பிய பிறகு ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளான்.


அதில் அவன் கூறும்போது, ‘பாகிஸ்தான் சிறையில் இருந்து கடந்த 11-ந்தேதியே தப்பிவிட்டதாகவும் 2011-ம் ஆண்டு தன்னை சரண் அடையுமாறு கூறியபோது அளித்த வாக்குறுதிகளை பாகிஸ்தான் பாதுகாப்பு படையினர் நிறைவேற்ற தவறிவிட்டதாகவும் கூறியுள்ளான்.


இஷானுல்லா இஷான் பெஷாவரில் 2014-ம் ஆண்டு ராணுவப் பள்ளியில் நடந்த தாக்குதலில் 132 பள்ளிக் குழந்தைகள் பலியான சம்பவத்தில் தொடர்புடையவன் என்பது குறிப்பிடத்தக்கது.




மலாலா மீது தாக்குதல் நடத்திய பயங்கரவாதி சிறையிலிருந்து தப்பியோட்டம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு