15,Jan 2025 (Wed)
  
CH
இந்திய செய்தி

ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்-மத்திய அரசு

7 பேர் விடுதலை தொடர்பாக சட்டப்படி முடிவெடுக்கும் அதிகாரம் தமிழக ஆளுநருக்கே உள்ளதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பேரையும் விடுவிக்கும்படி, தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரைத்த நிலையில், அந்த பரிந்துரை மீது ஆளுநர் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குறிப்பிட்டிருந்தார்.

அமைச்சரவை பரிந்துரை அளித்த அடுத்த நாளே தம்மை விடுவிக்காமல் சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளதால் தம்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விடுதலை செய்ய உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணை செயலாளர் முகமது நஸிம் கான் பதில் மனுத்தாக்கல் செய்தார். அதில் 7 பேர் விடுதலை குறித்த தமிழக அரசின் கடிதத்தை நிராகரித்து கடந்த 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமே உத்தரவு பிறப்பித்துள்ளதாக குறிப்பிடப்பட்டது. எனவே பேரறிவாளன் கருணை மனு மீது சுதந்திரமாகவும், சட்டப்படியும் ஆளுநர் முடிவெடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கின் விசாரணையை வரும் 12-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.




ராஜீவ்காந்தி கொலைவழக்கில் தொடர்புடைய 7 பேர் விடுதலை குறித்து ஆளுநர் சுதந்திரமாக முடிவெடுக்கலாம்-மத்திய அரசு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு