29,Mar 2024 (Fri)
  
CH
தொழில்நுட்பம்

அனிமேஷன் புகைப்படங்களை தடை செய்யும் டுவிட்டர்: அதிரவைக்கும் காரணம்!

பிரபல சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டரில் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் அனிமேஷன் கோப்புக்கள் என்பவற்றினையும் இணைத்து டுவீட் செய்ய முடியும் என்பது தெரிந்ததே.எனினும் தற்போது அனிமேஷன் வடிவிலான புகைப்படங்களுக்கு டுவிட்டர் நிறுவனம் தடை விதித்துள்ளது.குறித்த வகை கோப்புகளைப் பயன்படுத்தி பயனர்களின் தரவுகளை திருடுவதற்கு ஹேக்கர்கள் முயற்சித்தமையை அடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதாவது Animated PNG கோப்புக்களை பயன்படுத்தியே இந்த திருட்டு முயற்சி இடம்பெற்றுள்ளது.Epilepsy Foundation அமைப்பின் டுவிட்டர் கணக்கின் மீது இவ்வாறானதொரு தாக்குதல் இடம்பெற்றுள்ளமையும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.மேலும் இந்த தகவலை டுவிட்டர் நிறுவனம் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தின் ஊடாக வெளியிட்டுள்ளது.இதேவேளை MP4 வீடியோ கோப்புக்களை பயன்படுத்தி பயனர்களின் வாட்ஸ் ஆப் தரவுகள் திருடப்பட்டுவந்தமை தொடர்பில் சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






அனிமேஷன் புகைப்படங்களை தடை செய்யும் டுவிட்டர்: அதிரவைக்கும் காரணம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு