21,Aug 2025 (Thu)
  
CH
தொழில்நுட்பம்

இன்ஸ்டாகிராமில் விரைவில் 'ஆட்டோ ஸ்க்ரோல்' அம்சம்!

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான பிரபலமான சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம், அண்மைக் காலமாகப் பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதன் விளைவாக, இன்ஸ்டாகிராம் தற்போது உலகின் நான்காவது பெரிய சமூக வலைத்தளமாகத் திகழ்கிறது.


பயனர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, இன்ஸ்டாகிராம் விரைவில் 'ஆட்டோ ஸ்க்ரோல்' (AUTO SCROLL) என்ற புதிய அம்சத்தை ரீல்ஸில் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த அம்சம் செயல்பாட்டிற்கு வரும்போது, 'ஆட்டோ ஸ்க்ரோல்' விருப்பத்தை 'ஆன்' (ON) செய்தால், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் தானாகவே அடுத்தடுத்து இயங்கத் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது பயனர்களுக்குக் கூடுதல் வசதியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




இன்ஸ்டாகிராமில் விரைவில் 'ஆட்டோ ஸ்க்ரோல்' அம்சம்!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு