15,May 2024 (Wed)
  
CH
தொழில்நுட்பம்

மின்சாரத்தில் இயங்கும் புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தியது உலகப் புகழபெற்ற குரூஸ் நிறுவனம்..!

குரூஸ் நிறுவனம் போக்குவரத்துக்கு ஏற்றவகையில் ஸ்டீயரிங் அல்லது பெடல்கள் இல்லாத மின்சாரத்தில் இயங்கும் வாகனத்தின் மாதிரி வடிவமைப்பை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ளது.குரூஸ் ஆரிஜின்” என்று பெயரிடப்பட்ட இந்த வாகனம் ஹோண்டா மோட்டார் கோ லிமிடெட் உடன் இணைந்து உருவாக்கப்பட்டது.

ஓட்டுநர் இல்லாமல் சுயமாக இயங்கும் இந்த கார்கள், சோதனைக்காக கலிபோர்னியாவில் வழங்கப்பட்டுள்ளது.பொதுப்போக்குவரத்து சேவைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள குரூஸ் ஆரிஜின் வீதிகளில் மனிதக் கட்டுப்பாடு இல்லாது இயங்கக்கூடிய முழுமையான தொழிநுட்பத்தை கொண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் உற்பத்தி செலவு ஒரு உயர்நிலை மின்சார விளையாட்டு-பயன்பாட்டு வாகனத்தின் (எஸ்யூவி) உற்பத்தி செலவின் அரைவாசியாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.மனித கட்டுப்பாடு இல்லாமல் தன்னியங்கி வாகனங்களைப் உருவாக்கும் நிறுவனத்தில் குரூஸ் நவ்யா, மற்றும் மே மொபிலிட்டி போன்ற நிறுவனங்கள் முன்னனியில் உள்ளன.உலகெங்கிலும் உள்ள கார் தயாரிப்பாளர்கள் சுயமாக இயங்கும் வாகனங்களை உருவாக்க போட்டியிட்டு செயற்பட்டு வருகின்றனர்.எனினும், வீதி விபத்துக்கள் மற்றும் வீதி விதிமுறைகள் காரணமாக இந்த தொழில்நுட்பம் இன்னும் பரவலாக நுகர்வோரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.




மின்சாரத்தில் இயங்கும் புதிய வகை கார்களை அறிமுகப்படுத்தியது உலகப் புகழபெற்ற குரூஸ் நிறுவனம்..!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு