சீனாவை அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் மிருகங்களில் இருந்து பரவி உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.
வுகான் நகரில் உள்ள மார்க்கெட்டில் விற்கப்பட்ட பாம்பு கறியில் இருந்து கொரோனா வைரஸ் பரவியது என்று தெரிவித்தனர்.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் எறும்பு தின்னியிடம் இருந்து பரவி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
தெற்கு சீனாவில் உள்ள விவசாய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் காட்டு விலங்குகளிடம் பெறப்பட்ட 1000க்கும் மேற்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தனர். இதில் எறும்பு தின்னி உடலில் இருக்கும் வைரஸ்களின் மரபணுவில் 99 சதவீதம் கொரோனா வைரசுடன் ஒத்துப்போவதாக தெரிவித்துள்ளனர்.
இதனால் எறும்பு தின்னியிடம் இருந்து மற்ற விலங்குகளுக்கு குறிப்பாக பாம்புகளுக்கு பரவி இருக்கலாம் என்றும் பின்னர் மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..