ஆஸ்திரியாவின் கிராஸ் நகரில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் இன்று துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்தில் குறைந்தது எட்டு பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அதன்பின் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவித்தனர்.
இதுதொடர்பாக, அந்நாட்டு உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறுகையில், தகவலறிந்து காலை 10 மணிக்கு (உள்ளூர் நேரம்) சிறப்புப் படையினர் அனுப்பி வைக்கப்பட்டனர்.
பள்ளியிலிருந்து மாணவர்கள் மற்றும் ஊழியர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக தெரிவித்தனர். பலியானோர் விவரங்கள் பற்றிய தகவல் வெளியாகவில்லை.













0 Comments
No Comments Here ..