ஹொங்கொங் விமான நிலையத்திலிருந்து டெல்லி நோக்கிப் பயணித்த ஏர் இந்தியா விமானம் மீண்டும் ஹொங்கொங்கிற்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
விமானத்தில் தொழில்நுட்ப பிரச்சினை இருப்பதாக விமானி தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த விமானம் ஹொங்கொங் விமான நிலையத்தில் பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டுள்ளது.
மேலும் விமானத்திலிருந்து அனைத்து பயணிகளும், பணியாளர்களும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட பிரச்சினை குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
0 Comments
No Comments Here ..