12,Jul 2025 (Sat)
  
CH
WORLDNEWS

அமெரிக்க விசா கட்டணங்கள் 2026 முதல் உயர்வு: புதிய நிபந்தனைகளும் அறிமுகம்

அமெரிக்கா தனது விசா நிபந்தனைகளையும் கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கியுள்ள நிலையில், விசா கட்டணங்களை உயர்த்தியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றது முதல் விசா வழங்குவதில் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறார்.


சமீபத்தில் நிறைவேற்றப்பட்டு, ட்ரம்ப் ஒப்புதல் அளித்த 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் அரச செலவீனம் தொடர்பான சட்டமூலத்தின்படி இந்த விசா கட்டண உயர்வு நடைமுறைக்கு வரவுள்ளது.


இந்த சட்டத்தின்படி, குடியேற்றம் அல்லாத, அதாவது மாணவர், தொழில், சுற்றுலா போன்ற விசாக்களுக்கான கட்டணங்களுடன் கூடுதலாக $250 'இன்டகிரிட்டி' (Integrity) கட்டணம் வசூலிக்கப்படும். இது தவிர, மேலும் சில கூடுதல் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய கட்டண உயர்வுகள் 2026 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த நடைமுறை அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். மேலும், இந்தக் கூடுதல் கட்டணம் சில நிபந்தனைகளின் அடிப்படையில் நாடு திரும்பும்போது திருப்பித் தரப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டணங்கள் விலைவாசியுடன் தொடர்புடையவை என்பதால், ஆண்டுக்கு ஆண்டு கட்டணத் தொகையில் மாற்றம் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.




அமெரிக்க விசா கட்டணங்கள் 2026 முதல் உயர்வு: புதிய நிபந்தனைகளும் அறிமுகம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு