சஜித் பிரேமதாசவை தலைமையாகக் கொண்ட புதிய கூட்டணியின் வெற்றிக்காக பாடுப்படப் போவதாக ஜாதிக ஹெல உருமய,முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன அறிவித்துள்ளன.
மூன்று கட்சிகளினதும் தலைவர்களும் ஒன்றிணைந்து வௌியிடடுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது,
போலி பிரசாரங்கள் மூலம் அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றி தற்போது நாட்டில் குழப்பகரமான நிலைமையை நாட்டில் உருவாக்கியுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்து ,எழுச்சி மிக்கதும் வலு மிக்கதுமான அரசாங்கமொன்றை உருவாக்க புதிய கூட்டணியின் வெற்றிக்காக பாடுப்படப் போவதாக மூன்று கட்சிகளினதும் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்களினதும் எதிர்ப்பார்ப்புக்களுக்கு மாற்றமாக செயற்படும் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக பாரிய மக்கள் சக்தியை உருவாக்குவது தமது கடமையனெவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான புதிய கூட்டணியை உருவாக்குவதற்கான அனுமதி ஐக்கிய தேசியக்கட்சியின் செயற்குழுவினால் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.,













0 Comments
No Comments Here ..