ஆப்கானிஸ்தானில் முன்னெடுக்கப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் 13 தலிபான்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த தேடுதல் நடவடிக்கை அந்த நாட்டு பாதுகாப்பு படையினரால் விசேடமாக நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மைகாலமாக பயங்கரவாத குழுக்களை ஒழிக்க திட்டமிட்ட தாக்குதல்கள் அந்த நாட்டு பாதுகாப்பு தரப்பினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த நிலையில், பொது மக்களை இலக்கு வைத்து தாக்குதல் மேற்கொள்ளும் பயங்கரவாத குழுக்களை கட்டுப்படுத்தும் முகமாக நேற்று இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..