29,Mar 2024 (Fri)
  
CH
ஜரோப்பா

தமது குடியேற்றக் கொள்கைகள் பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது: மட்டியோ சல்வினி

தமது குடியேற்றக் கொள்கைகள் பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளதனை உலகத்திற்குச் சொல்ல வேண்டுமென இத்தாலி வலதுசாரிக்கட்சியின் தலைவர் மட்டியோ சல்வினி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத புகலிடக்கோரிக்கையாளர்களை கடலிலேயே தடுத்து வைத்திருந்ததாக, மட்டியோ சல்வினி மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இவ்விடயம் குறித்து விசாரணை செய்வதற்கு ஆதரவாக அந்நாட்டு செனட் சபை வாக்களித்துள்ளது.

இந்த நிலையிலேயே அவர் இக்கருத்தினை வெளியிட்டுள்ளார். அத்தோடு, தாம் நீதிமன்றத்திற்குச் செல்லவேண்டுமென மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் தாம் நிறைவேற்றிய விடயங்கள் தொடர்பாக, பெருமையடைவதாகவும் அவர் மேலும், தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் சிசிலி கரையோரத்தில், புகலிடக்கோரிக்கையாளர்களை சட்டவிரோதமாக பல நாட்கள் படகிலேயே தடுத்து வைத்திருந்ததாக இத்தாலியின் உள்விவகார அமைச்சராகக் கடமையாற்றிய மட்டியோ சல்வினி மீது குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது. இதன்போது 116 புகலிடக்கோரிக்கையாளர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.





தமது குடியேற்றக் கொள்கைகள் பல்லாயிரம் பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது: மட்டியோ சல்வினி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு