ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க நாட்டிற்கு வருகை தந்துள்ள நிலையில் அவரிடம் குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாடு திரும்பியிருந்த நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் அவர் கைது செய்யப்பட்டதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார்.
ரஷ்யாவிற்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்கவை நாட்டிற்கு வரவழைப்பது தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..