09,May 2024 (Thu)
  
CH
உலக செய்தி

வளைகுடாவில் பறக்க அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி

வளைகுடா பிராந்தியத்தில் அமெரிக்க சிவில் விமானங்கள் பறப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் விமான முகாமைத்துவ அமைப்பு (The U.S. Federal Aviation Administration) அறிவித்துள்ளது. 

கடந்த மாதம் 8ஆம் திகதி யுக்ரேனிய பயணிகள் விமானம் ஒன்றை அமெரிக்க இராணுவ விமானம் எனத் தவறாகக் கருதி அதனை ஈரான் சுட்டுவீழ்த்தியதில் அதில் பயணித்த 176 பேரும் கொல்லப்பட்டனர். 

இதனை அடுத்து பயணிகள் விமானங்களுக்கு வளைகுடா பிராந்தியத்தில் ஏற்பட்ட அச்சுறுத்தலைக் கருத்திற் கொண்டு அமெரிக்க விமான முகாமைத்துவ அமைப்பு (The U.S. Federal Aviation Administration) குறித்த பகுதியில் விமானங்கள் பறக்க தடை விதித்திருந்தது. 

இந்த நிலையில், வளைகுடா பிராந்தியத்தில் நிலைகொண்டிருந்த ஈரானிய இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைப்பு மற்றும் பயணிகள் விமானத்தை அடையாளம் காணுவதில் ஈரானுக்கு நிலவிய சிக்கல்கள் ஆகியன பாதுகாப்பான கட்டத்தை அடைந்துள்ளதாக அமெரிக்க விமான முகாமைத்துவ அமைப்பு (The U.S. Federal Aviation Administration) சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன், குவைத், சவூதி அரேபியா, பஹ்ரெய்ன், ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் ஆகிய வான்பரப்புபளில் பறப்பதற்கு அமெரிக்க சிவில் விமானங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

இதேவேளை, ஈரானிய எல்லைகளில் விமானங்களை இயக்குவதை அவதானத்துடன் செயற்படுத்த அல்லது தவிர்க்கவும் அமெரிக்க விமான முகாமைத்துவ அமைப்பு (The U.S. Federal Aviation Administration) வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 




வளைகுடாவில் பறக்க அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு