சீன ஊடகங்கள் மீது அமெரிக்கா புதிய விதிமுறைகளை அமுற்படுத்தவுள்ளது.
அமெரிக்காவில் இயங்கும் 5 சீன ஊடகங்களுக்கே இந்தப் புதிய விதிமுறைகள் அமுலாகவுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த 5 சீன ஊடகங்களும் சீன அரசினால் நடத்தப்படுபவை என்பது சுட்டிக்காட்டத் தக்கது.
இதன்படி, அந்த சீன ஊடக அமைப்புகள், தமது சொத்துக்கள் மற்றும் ஊழியர்கள் குறித்த விபரங்களை அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் பதிவு செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.
0 Comments
No Comments Here ..