கொரோனா வைரஸ் தொற்று காரணமாக, உலகளாவிய ரீதியில், இதுவரை 75,129 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அவர்களில் 12,017 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் 2007 பேர் உயிரிழந்துள்ளனர்,
சர்வதேச ரீதியில் இந்த வைரஸ் தொற்றினால் 26 நாடுகளில் பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானோரில், 13,818 பேர் குணமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments
No Comments Here ..