ரயில்வே திணைக்களத்தின் அனைத்து தற்காலிக ஊழியர்களுக்கும் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அமைச்சர் மஹிந்த அமரவீர சமர்ப்பித்த அமைச்சரவை பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.இதேவேளை, அரச நிறுவனங்களில் அமைய, ஒப்பந்த, தற்காலிக அடிப்படையில் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகளுக்கு நிரந்த நியமனம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், உள்ளூராட்சிமன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளது.
இது தொடர்பில் வௌியிடப்பட்ட சுற்றறிக்கைக்கு அமைய, நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ள அலுவலக உதவியாளர்கள் மற்றும் சாரதிகள், 180 நாட்கள் தொடர்ந்து சேவையில் ஈடுபட்டவர்களாகவும் உரிய கல்வித் தகைமைகளை கொண்டவர்களாவும் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.தேவையான தகமைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு அலுவலக தலைமை அதிகாரிகளால் தற்காலிக நியமனக் கடிதம் வழங்கப்படவுள்ளது.
தற்காலிக நியமனக் கடிதங்களை பெற்று 3 மாதங்களுக்குள் நிரந்தர நியமனங்களுக்கான கடிதங்களை ஒன்றிணைந்த சேவைகளுக்கான பணிப்பாளர் நாயகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..