அனைத்து தேசிய பாடசாலைகளிலும் தவணைக்காலங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்படும் ஆசிரியர் இடமாற்றங்கள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்படுவதாக அதிபர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.
இதனடிப்படையில் இந்த வருடத்திற்கான ஆசிரியர் இடமாற்றங்கள் மேற்கொள்வதற்கான தினம் தொடர்பில் எதிர்காலத்தில் அறிவிக்கவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவிக்கின்றது.
அத்துடன் எதிர்காலத்தில் ஆசிரியர் இடமாற்றங்கள் தொடர்பில் நவீன தொழில்நுட்ப முறைமையொன்றை அறிமுகப்படுத்தவுள்ளதாக கல்வியமைச்சு கூறுகின்றது.
இதனூடாக ஆசிரியர்களை இலகுவாகவும்.முறையாகவும் மற்றும் வௌிப்படைத்தன்மையாகவும் இடமாற்றங்களை மேற்கொள்ள கூடியதாகஇருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..