யாழ்ப்பாணம் - மருதங்கேணி பிரதேசத்தில் 3 கிலோகிராம் மற்றும் 500 கிராம் அளவிலான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
கடற்படையினரின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் இந்த தகவல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
வடக்கு பிராந்திய கடற்படையினர் (Northern Naval Command) மற்றும் மதுவரித் திணைக்களத்தின் சங்கேணி பிரதேச அதிகாரிகள் ஆகியோர் இணைந்து மருதங்கேணி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது.
மருதங்கேணி பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது 3 கிலோகிராம் மற்றும் 500 கிராம் அளவிலான கஞ்சாவைக் கொண்ட சந்தேகத்துக்குரிய பொதிகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டதாக, கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வரும் இவ்வாறான தேடுதல்கள் குறித்த அச்சத்தினால் குறித்த பொதிகள் சந்தேக நபர்களினால் வீசப்பட்டிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில், மதுவரித் திணைக்களத்தின் பிரதேச அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.













0 Comments
No Comments Here ..