பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக, இந்திய அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றைக் கைச்சாத்திடுவதற்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இந்திய அரசாங்கம் மற்றும் இலங்கை அரசாங்கத்திற்கு இடையில் மேற்கொள்ளப்பட வேண்டிய, யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலைய அபிவிருத்திக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை தொடர்பில், சுற்றுலா மற்றும் விமான சேவைகள் அமைச்சர் சமர்ப்பித்த ஆவணத்திற்கே அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சர்வதேச விமான பயணங்களை முன்னெடுக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவுள்ள இந்திய அரசாங்கம், இலங்கை நாணயத்தில் 300 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு உடன்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதியை யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் முனைய மாற்றுதல், மின்சக்தி விநியோகம், பயன்பாட்டு சேவை மற்றும் விமானப் போக்குவரத்து போன்ற துறைகளில், வசதிகளை மேம்படுத்துவதற்காக பயன்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..