அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனநாயகக் கட்சி வேட்பாளரைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நேற்று இடம்பெற்றது.
'சூப்பர் செவ்வாய்க்கிழமை வாக்களிப்பு' என அழைக்கப்படும் இந்த வாக்கெடுப்பு அமெரிக்காவின் 14 மாநிலங்களில் இடம்பெற்றது.
பெர்னி சாண்டர்ஸ் (Bernie Sanders), ஜோ பைடன் (Joe Biden) மற்றும் மைக்கேல் புளூம்பர்க் (Michael Bloomberg) உள்ளிட்ட பலர் இந்த தேர்தலில் போட்டியிட்டனர்.
அத்துடன், இந்து சமயத்தைச் சார்ந்த, இந்திய வம்சாவளி பெண்ணான துளசி கப்பார்ட்டும் (Tulsi Gabbard) போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் வெற்றி பெறுபவர், அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில், டொனால்ட் ட்ரம்ப்பை எதிர்த்து போட்டியிடும் வாய்ப்பைப் பெறுவார்.
அமெரிக்காவின் 14 மாநிலங்களிலும் பல்வேறு வாக்களிப்பு மையங்களில் நேற்றைய வாக்கெடுப்பு இடம்பெற்றது.
பாடசாலைகள், உடற்பயிற்சி மையங்கள், தீயணைப்பு நிலையங்கள், பல்கலைக்கழகங்கள், மரண வீடுகள் மற்றும் திரையரங்குகள் என பல்வேறு இடங்களில் வாக்களிப்பு மையங்கள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மேற்படி தேர்தலின் வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments
No Comments Here ..