29,Apr 2024 (Mon)
  
CH
உலக செய்தி

குண்டுவிழுந்தபோது சிரித்த சிரிய குழந்தைக்கு இறுதியில் நடந்தது இதுதான்

சிரியாவின் இட்லிப் பகுதியில் சிரிய இராணுவத்திற்கும், துருக்கி பின்னணி ஆயுதக் குழுக்களிற்குமிடையில் உக்கிர யுத்தம் நடந்து வருகிறது. ரஷ்யாவின் வான்வெளி தாக்குதலை ஈடுகொடுக்க முடியாமல் ஆயுதக்குழுக்கள் தலைதெறிக்க தப்பியோடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தநிலையில் அங்குள்ள ஐந்து இலட்சம் மக்கள், சிரியா – துருக்கி எல்லையில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில், சண்டை நடக்கும் பகுதியில் வசிக்கும், அப்துல்லா முஹம்மத் தன் மூன்று வயது குழந்தை சல்வாவுக்கு, ‘போர் ஒரு விளையாட்டு… குண்டுகள் வெடிக்கும் சத்தம் கேட்டதும் சிரிக்க வேண்டும்’ எனக்கூறி, குண்டுகளின் சத்தத்திற்கு சிரிக்க கற்றுக் கொடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களின் முன்னர் வைரலானது.

அந்த வீடியோ அனைவரது மனதையும் அசைத்துள்ளது. குறிப்பாக, துருக்கி அரசுக்கும் உதவும் மனநிலையை வரவழைத்துள்ளது. இதையடுத்து, அந்த குழந்தையின் குடும்பம், சிரியா – துருக்கி எல்லையைப் பாதுகாப்பாகக் கடக்க துருக்கி அரசு உதவியுள்ளது.

அப்துல்லாவும் அவரது மூன்று வயது மகள் சல்வாவும், பாதுகாப்பாக எல்லையைக் கடந்ததாகவும், தற்போது தெற்கு துருக்கியில் உள்ள ஓர் அகதிகள் முகாமில் பத்திரமாக இருப்பதாகவும் துருக்கி ஊடகவியலாளர் ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.




குண்டுவிழுந்தபோது சிரித்த சிரிய குழந்தைக்கு இறுதியில் நடந்தது இதுதான்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு