வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு முன்னாள் ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார்.
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
ஒவ்வொரு நபரும் குறைந்த பட்சம் அதிகாலை 5 மணிக்கு எழ வேண்டும். இரவு நேரத்துடன் நித்திரைக்கு செல்லவேண்டும். இவ்வாறு எத்தனைபேர் எழுகின்றனர்? கேள்விக்குறிதான்
எத்தனை பேர் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை கொண்டுள்ளனர். எத்தனை பேர் உடற்பயிற்சி செய்கின்றனர். நோய்கள் அதிகரித்து வைத்தியசாலைகள் நிரம்பி வழிகின்றன. வைத்தியசாலைகளை எவ்வளவு பெரியதாக நிர்மாணித்தாலும், எத்தனை வைத்தியர்களை கொடுத்தாலும், புதிய இயந்திரங்களை வழங்கினாலும், நோய் நிலைமை குறைவடையவில்லை. நோய்கள் கட்டுப்படுத்தப்படவில்லை. இவற்றை வைத்தியர்களால் செய்ய முடியாது. அதனை தம்மால் மட்டுமே செய்ய முடியும். தமது உணவு பழக்க வழக்கங்கள், காலையில் நேரத்துடன் எழுந்திருப்பது, உடற்பயிற்சி செய்வது. இவற்றை உலகின் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் மக்கள் செய்கின்றனர் எனக் கூறியுள்ளார்.
0 Comments
No Comments Here ..