சமகி பல வேகய உருவாக்கப்பட்டது எப்போதும் எதிர்க்கட்சியிலேயே இருப்பதற்காக அல்ல என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தொம்பே பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணி எப்போதும் எதிர்க்கட்சியின் பணிகளை செய்யும் நிலைப்பாட்டில் உள்ளனர். அவர்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் அவர்களின் கடமைகளை உரிய வகையில் செய்கிறார்கள் என்ற போதும், சமகி ஜன பலவேகயவை உருவாக்கியது எப்போதும் எதிர்க்கட்சியிலேயே இருப்பதற்காக அல்ல.
நாம் சில காலங்களின் பின்னர் எதிர்க்கட்சிக்கு வருவோம்.
தற்போது எம்மில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து எதிர்க்கட்சியில் நிலைத்திருக்க எதிர்ப்பார்க்க வில்லை. அரசாங்கம் ஒன்றை அமைக்கவே நாம் கட்சி ஒன்றை உருவாக்கியுள்ளோம். எனினும் ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என்ற கூற்றை நான் ஏற்கப் போவது இல்லை.
அவர்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னரும் இப்படிதான் நினைத்துக் கொண்டிருந்தனர்.
தற்போது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தூக்கத்தில் உள்ளார். அவர் வழங்கிய வாக்குறுதிகள் அவருக்கே ஞாபகம் இல்லை.
அதனால், பொதுமக்கள் தீர்மானிப்பார்கள் அவர்கள் இருக்க வேண்டுமா? அல்லது மாற்றப்பட வேண்டுமா என்று.
0 Comments
No Comments Here ..