சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 120 க்கும் அதிகமான நாடுகளுக்கு பரவியுள்ளது.
இந்த வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 4 ஆயிரத்து 600 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 25 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.
இதற்கிடையில் வைரஸ் பரவுவதில் இருந்து தற்காத்துக்கொள்ள மக்கள் முகமூடிகளை அதிக அளவில் பயன்படுத்திவருகின்றனர். இதனால் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் முகமூடிகளின் தேவை அதிகரித்து வருகிறது. மேலும், முகமூடிகளின் விலையும் உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு முன்னதாக நாளொன்றுக்கு 2 கோடி முகமூடிகளை சீனாவில் உள்ள நிறுவனங்கள் உற்பத்தி செய்துவந்தது. ஆனால், தற்போது கொரோனா காரணமாக அந்நாட்டில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் முகமூடிகளின் தேவை அதிகரித்துள்ளது.
இதையடுத்து, 2 ஆயிரத்து 500-க்கும் அதிகமான சீன நிறுவனங்கள் தொடர்ந்து முகமூடிகளை உற்பத்தி செய்யும் வேலையை செய்துவருகிறது. சராசரியாக ஒரு நாளை 10 கோடி முகமூடிகள் என்ற எண்ணிக்கையில் உற்பத்தி நடைபெற்றுவருவதாக சீனா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உற்பத்தியின் மூலம் தேவைப்படும் நாடுகளுக்கு முகமூடிகளை சீனா விற்பனை செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments
No Comments Here ..