ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகள் என்பனவற்றை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி மார்ச் மாதம் 16 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் உள்ள ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் மற்றும் கல்வியியற் கல்லூரிகளின் செயற்பாடுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய 2 வாரங்களின் பின்னர் மீண்டும் மார்ச் 30 ஆம் திகதி கல்வி நிறுவனங்களின் கற்றல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்தாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது
0 Comments
No Comments Here ..