கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று (16) முதல் மறு அறிவித்தல் வரையில் இலங்கையில் உள்ள தூதரகங்கள் சிலவற்றின் கவுன்சிலர் சேவை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவற்றுள் இத்தாலி, ஈரான், தென் கொரியா, பிரான்ஸ், ஸ்பைன், ஜேர்மனி, சுவிட்ஸர்லாந்து, டென்மார்க், நெதர்லாந்து, சுவீடன் மற்றும் ஒஸ்ரியா ஆகியவை உள்ளடங்குகின்றன.
குறித்த நாடுகளிற்கு இலங்கை அரசாங்கம் விதித்துள்ள தடைகளை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
0 Comments
No Comments Here ..