கடுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிகாட்டுதலின் கீழ் நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் இன்று முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள திரையரங்குகள் மீண்டும் திறக்க அனுமதிக்கப்படவில்லை. இதன்போது திரையரங்களுகள் அதன் திறனில் 25 மாத்திரமே செயற்பட இடமளிக்க அனுமதிக்கப்படுள்ளது.
இதற்காக அனைத்து சினிமா திரையரங்குகளும் கிருமி நீக்க தொற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதுடன், சுகாதார வழிகாட்டுதல்களை அனைத்து பார்வையார்களும் பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய இன்று முதல் நாடளாவிய ரீதியில் உள்ள திரையரங்குகளை திறக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்கத்கது
0 Comments
No Comments Here ..