22,May 2025 (Thu)
  
CH
இலங்கை செய்தி

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய அறிவித்தல்...

க.பொ.த சாதாரண தர பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு பரீட்சை அனுமதி பத்திரம் தபால் மூலம் அனுப்பப்பட்டுள்ளதுடன் இதுவரை கிடைக்காத பரீட்சார்த்திகள் பரீட்சை திணைக்களத்தின் இணையத்தளத்தில் அதனை தரவிறக்கம் செய்து கொள்ள முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டை இலக்கத்தையோ அல்லது பரீட்சை இலக்கத்தையோ பயன்படுத்தி மேற்படி அனுமதிப்பத்திரத்தின் பிரதி ஒன்றை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.


இதேவேளை எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைக்கான ஆலோசனைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளன.


அதற்கிணங்க அனைத்து பரீட்சை நிலையங்களும் கிருமித் தொற்று நீக்கத்துக்கு உட்படுத்தப்பட்டு சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன் மாணவர்கள் பரீட்சை நடைபெறும் ஒரு மணித்தியாலத்திற்கு முன்பாகவே பரீட்சை நிலையத்திற்கு வருகை தர வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.




க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கு விடுக்கப்பட்ட மிக முக்கிய அறிவித்தல்...

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு