இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் ரி 20 போட்டிகளிற்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 2 வருடங்களின் பின்னர் ரி20 அணியில் கிறிஸ் கெய்ல் இணைக்கப்பட்டுள்ளார். இரண்டு அணிகளிற்கும் கிரான் பொலார்ட் தலைமை தாங்குகிறார்.
மேற்கிந்திய தீவுகளிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இலங்கை அணி, மார்ச் 3, 5 மற்றும் 7 ஆகிய திகதிகளில் கூலிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் ரி 20 போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான மேற்கிந்தியத்தீவுகள் அணியில் மூத்த வீரர்கள் கிறிஸ் கெய்ல், பிடல் எட்வர்ட்ஸ் ஆகியோர் அழைக்கப்பட்டுள்ளனர். ஓஃப்-ஸ்பின்னர் கெவின் சின்க்ளேர், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அகீல் ஹொசைன் ஆகியோர் சர்வதேச அறிமுகத்தை பெறுகிறார்கள். ஒருநாள் தொடர் மார்ச் 10, 12 மற்றும் 14 ஆகிய திகதிகளில் சேர் விவியன் ரிச்சர்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும். இறுதிப் போட்டி பகல் / இரவு போட்டியாக நடைபெறும்
0 Comments
No Comments Here ..