கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவலை தடுப்பதற்காக 6 மில்லியன் ´ஸ்புட்னிக் V´ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
நேற்று (05) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எட்டப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை மற்றும் உடன்படிக்கை குழுவின் பரிந்துரைக்கமைய 07 மில்லியன் ´ஸ்புட்னிக் v ´ தடுப்பூசிகளை, ஒரு தடுப்பூசி 9.95 அமெரிக்க டொலர்கள் வீதம் 69.65 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு கொள்வனவு செய்வதற்காக 2021 மார்ச் மாதம் 23 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த தடுப்பூசியின் அளவுக்கு மேலதிகமாக 06 மில்லியன் ´ஸ்புட்னிக் v´ தடுப்பூசிகளை கொள்வனவு செய்வதற்காகவும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
0 Comments
No Comments Here ..