தமிழர்களை கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் உணர தொடங்கியுள்ளனர். அதேவேளை தமிழரசு கட்சியை நிராகரிக்க தொடங்கியவர்களின் செயற்பாடு கட்சியை மீட்டெடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று (26) மாலை 4 மணியளவில் அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சுடரேற்றி அஞ்சலி செலுத்திய பின்னர் உரையாற்றும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்
சிங்கள தேசம் தமிழர்கள் மீது தனி சிங்கள மொழி சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டபோது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அகிம்சையை ஆயுதமாக்கி போராடிய பெருந்தலைவர் தந்தை செல்வா அவர்கள் மலையக மக்களின் உரிமையை மீட்டெடுக்கவும் பாடுபட்ட தலைரினால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும் தமிழர்களின் உரிமைக்காக எப்போதும் பாடுபடும்.
கடந்த தேர்தல் காலங்களில் எமது கட்சியை வீழ்த்த பாடுபட்டவர்கள் இன்று அதற்கான அடியை இன்று தமிழ் மக்கள் கொடுக்க தொடங்கியுள்ளனர். இந்த நாட்டில் பலம் பொருந்திய ஆயுத போராட்டம் இருந்தது அதன் தொடக்கம் தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தோடு ஒப்பீட்டு பார்க்கப்பட வேண்டியுள்ளது என தெரிவித்தார்.
இந்த நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் காந்தரூபன், இலங்கை தமிழரசு கட்சியின் பொத்துவில் கிளை தலைவர் கலாநேசன் கட்சியின் ஆதரவாளர்கள் சுகாதார நடைமுறையுன் கலந்து கொண்டு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
0 Comments
No Comments Here ..