24,Nov 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் -இராணுவத் தளபதி வேண்டுகோள் - முடக்கல் நிலை வரலாம் எனவும் தெரிவிப்பு

பொதுமக்களை அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்திருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள இராணுவத் தளபதி சவேந்திர சில்வா அதிகளவு நோயாளர்கள் கண்டுபிடிக்கப்படும் பகுதிகள் முடக்கப்படலாம் எனத் தெரிவித்துள்ளார்.

பல நாட்களிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொண்டு தயாராகயிருப்பது சிறந்தது எனத் தெரிவித்துள்ள இராணுவத் தளபதி எனினும் எதிர்வரும் நாட்களில் கண்டுபிடிக்கப்படவுள்ள நோயாளிகளின் எண்ணிக்கையே இதனைத் தீர்மானிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் மக்களை மிரட்டவேண்டிய அவசியமோ அல்லது உண்மையை மறைக்க வேண்டிய தேவையோ இல்லை எனத் தெரிவித்துள்ள சவேந்திர சில்வா கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் சிகிச்சை நிலையங்களை அதிகரிக்க இராணுவம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்

மருத்துவமனைகளிற்கு தேவைப்பட்டால் மேலும் ஆயிரம் கட்டில்களை வழங்க தயாராகவுள்ளோம் என சுகாதார துறையினருக்கு தெரிவித்துள்ளோம், நாங்கள் என்ன சவால்களை எதிர்கொண்டாலும் நாங்கள் தோற்கும் தேசமில்லை ஒரு தேசமாக நாங்கள் மீண்டெழுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நோயாளிகளிற்கு தேவையான ஒக்சிசன் நிலவரம் குறித்து 12 மணித்தியாலங்களிற்கு ஒரு முறை சுகாதார சேவைகள் பணிப்பாளரை நான் தொடர்புகொள்கின்றேன் ஒக்சிசன் விநியோக நிறுவனங்கள் ஒக்சிசன் போதுமான அளவு இருப்பதாகதெரிவிக்கின்றன எனவும் சவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.





அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்து வைத்துக்கொள்ளுங்கள் -இராணுவத் தளபதி வேண்டுகோள் - முடக்கல் நிலை வரலாம் எனவும் தெரிவிப்பு

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு