25,Aug 2025 (Mon)
  
CH
இலங்கை செய்தி

நாட்டில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் இன்று பதிவு!

இலங்கையில் மேலும் 1636 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.



இன்றைய தினத்தில் மாத்திரம் 1,636 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.


இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.


அதனடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 108,120 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இந்நிலையில் இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 530 பேர் இன்று (30) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 95,975 ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை இலங்கையில் 667 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.




நாட்டில் அதிகபட்ச கொரோனா நோயாளர்கள் இன்று பதிவு!

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு