12,May 2024 (Sun)
  
CH
இலங்கை செய்தி

பழமையான பண்டைய வரலாற்றுடன்.........

மட்டக்களப்பில் செங்கலடி பிரதேச செயலகத்துக்குட்பட்ட ஈரளக்குளம் ஆழியாஓடை | கவர் மலை கிராமத்தின் எல்லையில் புலுட்டுமானோடை காட்டுக்குள் அமைந்துள்ள 2200 வருடங்கள் பழமையான பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசத்தினை அண்மையில் அரச அதிகாரிகள் , தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் , பௌத்த பிக்குகள் வருகை தந்து பார்வையிட்டு அவ்விடத்தில் பௌத்த மத்தியஸ்தானம் அமைப்பதற்கான பூர்வாங்க ஏற்பாடுகள்; கொள்ளப்படுவதாக வெளிவந்த செய்திகளைத் தொடர்ந்து நேற்றைய தினம் நானும் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளும் அவ்விடம் ; களவிஜயமொன்றை மேற்கொண்டிருந்தோம் . தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் , கோ.கருணாகரம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன் , சீ.யோகேஸ்வரன் , ஞா.சிறிநேசன் , முன்னாள் மாகாணசசபைப் பிரதித் தவிசாளர் இந்திரகுமார் பிரசன்னா , மாகாணசபை உறுப்பினர் மா.நடராசா , உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள் , பிரதித் தவிசாளர்கள் , இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வாலிபர் முன்னணித் தலைவர் கி.சேயோன் மற்றும் மட்டக்களப்பு வாலிபர் முன்னணி தலைவர் தீபாகரன் உள்ளிட்ட பலரும் இவ் விஜயத்தில் கலந்து கொண்டிருந்தனர். இப்பிரதேசம் பண்டைய வரலாற்றுடன் தொடர்புபட்ட பிரதேசமாக இருப்பதுடன் பல செதுக்கல்கள் , படி அமைப்புகள் போன்றனவும் இங்கு அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது . மேற்படி பிரதேசம் தொல்பொருள் சார்ந்த பிரதேசமாக இருந்தாலும் , இதனை வைத்து இது பௌத்தத்திற்குரியது என்று சொல்லி பௌத்த விடயங்களை முன்னெடுப்பதை நோக்காகக் கொண்டு அரசு செயற்பட முனையக் கூடாது , அதிகாரிகளும் அவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு நல்கக்கூடாது , அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படின் அதற்கெதிரான நடவடிக்கைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மேற்கொள்ளும். குறிப்பு : இந்த தொல்பொருளிடம் தொடர்பாக தொல்பொருள் ஆராட்சியாளர் NKS திருச்செல்வத்திடம் கேட்டபோது இது 2200 வருடங்கள் பழமையான இடம் என்றும்; சிவன், நாகர் என்போரது குகைக் கல் வெட்டுக்கள் உள்ளதாகவும் இது தொடர்மலை என்று அழைக்கப்படுவதாகவும் அங்கு 10க்கும் மேற்பட்ட குகைகளும் தமிழ்ப் பிராமிக் கல் வெட்டுக்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். தகவல் பாரளுமன்ற உறுப்பினர் #Shanakiyan நன்றிகள்.



உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்.

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்





பழமையான பண்டைய வரலாற்றுடன்.........

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு