30,Apr 2024 (Tue)
  
CH
உலக செய்தி

இப்படிதான் கொரோனா பரவுகிறது.. ஜாக்கிரதையா இருங்க.. உலக சுகாதார மையம்

ஜெனீவா: உலகில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு புதிய கொரோனா வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. கடந்த 2019இல் கண்டறியப்பட்ட கொரோனா, தற்போது உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. ஓர் ஆண்டை கடந்தும் உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் குறைந்ததாகத் தெரிவில்லை. கொரோனாவைக் கட்டுப்படுத்த முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மிக வேகமாகத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும்கூட இந்த கொரோனா பற்றி நாம் இன்னும் முழுமையாகத் தெரிந்துகொள்ள வில்லை.

உலக சுகாதார அமைப்பு கொரோனா பரவ தொடங்கிய போது, உலக சுகாதார அமைப்பு, இந்த வைரஸ் காற்றில் பரவ வாய்ப்பில்லை என்றே தெரிவித்தது. கொரோனா பாதித்தவர்கள் மட்டும் மாஸ்க்குகளை அணிந்தால் போதும் என்றும் உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டிருந்து. காற்றின் மூலம் கொரோனா பரவ வாய்ப்பில்லை என்றே உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கூறி வந்தது.

காற்றில் பரவும் கொரோனா இது தொடர்பாக உலகெங்கும் நடத்தப்பட்ட ஆய்வுகளில் கொரோனா காற்றின் மூலம் பரவுவது உறுதியானது. இதையடுத்து உலக சுகாதார அமைப்பு தற்போது தனது வழிகாட்டுதல்களை மாற்றியுள்ளது. உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், கொரோனா பரவல் என்பது 1 மீட்டருக்குள் இருப்பவர்களுக்கு மத்தியில் எளிதாகப் பரவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கண், மூக்கு & வாய் கொரோனா வைரசை கொண்டிருக்கும் துளிகள் ஒருவரது கண், மூக்கு அல்லது வாய் வழியே மற்றொருவர் உடலில் நுழையும்போது கொரோனா பரவுகிறது. மோசமான காற்றோட்டம் கொண்ட அல்லது நெரிசல் அதிகம் உள்ள அறைகளில் இந்த வைரஸ் வேகமாகப் பரவக்கூடும், அதேபோல கொரோனா வைரஸ் இருக்கும் இடத்தை தொட்டு, பின்னர் அதே கைகளைச் சுத்தப்படுத்தாமல் கண், மூக்கு, அல்லது வாயில் ஒருவர் கை வைத்தால் கொரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

காற்றில் பரவும் கொரோனா கொரோனா வைரஸ் 1 மீட்டாரைத் தாண்டியும் காற்றின் அதிக தூரம் மிதந்து கொண்டு செல்ல வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும், உலகின் சில பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைகள், மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவுவதாகக் கூறப்படுகிறது. இது குறித்து உறுதியான முடிவுகள் இல்லை. எனவே இது தொடர்பாகக் கூடுதல் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

உடனுக்குடன் தேர்தல்களம், சினிமா கிசுகிசு, செய்திகள் விளையாட்டு, நிகழ்வுகள்... Tamils4.com News channel உடன் எப்போதும் இணைந்திருங்கள்

இந்தச் செய்தியை மற்றவர்களும் அறிவது நல்லது எனில் கீழேயுள்ள பட்டன்களில் அழுத்தி உங்கள் சமூக வலைத் தளங்களில் பகிர்ந்து கொள்ளுங்கள்




இப்படிதான் கொரோனா பரவுகிறது.. ஜாக்கிரதையா இருங்க.. உலக சுகாதார மையம்

0 Comments

    No Comments Here ..

Leave a comment

Post Comment





<

செய்திமடல்

ராசிப்பலன்கள்

கருத்துகணிப்பு