நாட்டில் அதிகரித்துள்ள கொரோனா தொற்று காரணமாக பொது போக்குவரத்து தொடர்பில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றினை கட்டுப்படுத்தும் நோக்கில் விதிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை, பொதுப் போக்குவரத்தின் போது மீறுபவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, பேருந்து, டக்ஸி மற்றும் முச்சக்கரவண்டி என்பவற்றை பொதுப் போக்குவரத்தில் ஈடுபடுத்தும் போது கடைப்பிடிக்க வேண்டிய சுகாதார விதிகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த விதிகளை மீறுபவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக இன்று விசேட காவல்துறை சோதனை நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
எனவே, பொதுப்போக்குவரத்து தொடர்பான பரிந்துரைகள் தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்துமாறு பிரதி பொலிஸ்மா அதிபர் மேலும் தெரிவித்தார்













0 Comments
No Comments Here ..