நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த 42 கிராம சேவகர் பிரிவுகளை உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருகோணமலை, களுத்துறை மாவட்டத்தில் சில கிராம சேவகர் பிரிவுகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தனிமைப்படுத்தல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கிடையில் இன்றைய தினம் முழுமையாக நாடு முடக்கப்பட்டுள்ளதுடன், பொது மக்கள் எவரும் வெளியே வரவேண்டாம் என்றும் அதியாவசிய தேவையின் பொருட்டு சில அனுமதிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரப் பிரிவு அறிவித்துள்ளது.
0 Comments
No Comments Here ..