கொரோனா வைரஸின் கடுமையான ஆறு விகாரங்கள் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரித்தானிய வைரஸ், இந்திய வைரஸ், ஆப்பிரிக்க வைரஸ், டென்மார்க் வைரஸ், நைஜீரியா மற்றும் இலங்கையில் உருவாகிய புதிய வகை வைரஸ் என ஆறு வகையான வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இவை அனைத்தும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
எனினும், பிரித்தானிய மாறுபாடு சமூகத்தில் காணப்படுகிறதாக ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் உயிரியல் துறையின் தலைவர் டாக்டர் சந்திம ஜீவந்தர தெரிவித்தார்.
இதேவேளை, இவற்றில் மிகவும் ஆபத்தான வைரஸ் பிரித்தானிய வகை வைரஸ் என தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments
No Comments Here ..